அக்டோபர் மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று புளு மூன் எனப்படும் பவுர்ணமி நிலவு வானில் தோன்றுகிறது.
வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி ஆகியன மாதத்தில் ஒரு முறை வரும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வருவது அரிதான நிகழ்வு என்பதால் அது ஆங்கிலத்தில் புளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்தின் முதல் நாளில் ஒரு பௌர்ணமி வந்த நிலையில், இன்று இரண்டாவது பவுர்ணமியாகும்.
இதற்கு முன் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதலிலும் இறுதியிலும் இரு பவுர்ணமி தோன்றியது.
ஒரே மாதத்தில் இருமுறை தோன்றும் பவுர்ணமி என்பதால் தான் புளூ மூன் எனப்படுகிறது என்றும், நிலவு நீல நிறத்தில் தெரியாது என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.