திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழாவில், கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாடி அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கல்யாண உற்சவம் மண்டபத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
கோயில் வளாகத்துக்குள் நடைபெற்ற விழாவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆரத்தி கொடுத்து வழிபட்டனர். கஜ வாகனம் என்பதால் கோயில் யானைகளுக்கு பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டது.