திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில் அருள்பாலித்தார்.
ஏழுமலையான் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது.
3ஆம் நாளான இன்று காலை சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து மாலை கோயில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாடி, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நாளை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.