மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் 17ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின்போது அம்மன் சன்னதி 2ஆம் பிரகாரத்தில் உள்ள கொலுமண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்பாள், ராஜராஜேஸ்வரி, கடம்பவனவாசினி, மகிசாசுரமர்த்தினி என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.
இதேபோல் சுவாமி சன்னதி 2ஆம் பிரகாரத்தில் கொலுச்சாவடிக்காக 13 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் பொம்மைகள் வைக்கப்பட உள்ளன.