ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மேலும் ஒரு யானை வந்துள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அந்த கோவிலில் ஆண்டாள் என்ற 45 வயது யானை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த பிரபல மில்லுக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் கோவிலில் 20 வயதுடைய பிரேமி என்ற லட்சுமி யானை சேவை செய்து வந்தது.
அந்த யானை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
கோவையில் இருந்து லாரியில் ஏற்றி அழைத்து வரப்பட்ட யானை பிரேமி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.