நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு வர வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு 8ஆம் தேதி வரை அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உள்ளூர்வாசிகள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளோடு ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7ஆம் தேதி நடைபெறும் தேர்பவனியிலும் 8ஆம் தேதி நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்விலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் ஆலய நிர்வாகத்தினரும் போதகர்களும் மட்டுமே பங்குபெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தங்கும் விடுதிகளைத் திறக்கவும் 8ஆம் தேதி வரை அனுமதியில்லை என்றும் கடற்கரைக்குச் செல்லவும் மக்களுக்கு அனுமதியில்லை என்றும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது