வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படத்தை பொதுமக்களே கண்டுபிடிக்க வகை செய்யும் கையேடு ஒன்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
வண்ணப் படங்களுடன் எளிமையான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ள அந்த கையேட்டை பயன்படுத்தி பால், எண்ணெய், சர்க்கரை மற்றும் மசாலா பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை கண்டுபிடிக்க 50 உடனடி சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளிக்கவும், நாடு முழுக்க பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாகவும் உணவு பாதுகாபபு ஆணையம் கூறியுள்ளது.