டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
காய்ச்சல் வந்தால் சுயமாக மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து சென்னை அசோக் நகர் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியினையும் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.