செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பீட்ஸா, பர்கர் ஆசையா..? உஷார் மக்களே.. எலும்பு நிபுணர்களின் எச்சரிக்கை..

Aug 04, 2023 06:45:47 PM

ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் பீட்ஸா, பர்கர், நிறமூட்டப்பட்ட குளிர் பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுவாக 206 எலும்புகளால் ஆனது மனித உடல் என்பார்கள். ஒவ்வொன்றும் உடல் இயக்கத்துக்கு வெகு முக்கியமானது. வயதாக ஆக எலும்புகளிலும் மூட்டு ஜவ்வுகளிலும் தேய்மானம் ஏற்படக் கூடும். ஆனால் துரித உணவுகளும் ஜங்க் ஃபுட்ஸும் உட்கொள்வதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குக் கூட எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

வயது ஏற ஏற உடற்பயிற்சியை வாழ்வின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 40 வயது வரை ஜாகிங் போகலாம். 50 வயது வரை வேகமாக நடக்கலாம். அதற்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக நடந்து உடற்பயிற்சி மேற்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சிறந்த வழி என்று குறிப்பிடும் மருத்துவர்கள், அதிக கால்சியம் சத்துள்ள வெந்தயம், நிலக்கடலை, கீரை, பிரண்டை, ஆட்டு கால் சூப் போன்றவற்றை அவ்வப்போது உட்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு ஓய்வெடுத்தவர்களுக்கு எலும்புகளில் உள்ள ஆஸ்ட்ரிநோ பிளாஸ்ட் செல்களின் செயல்பாடு குறைந்திருக்கக் கூடும் என்றும், அத்தகையவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் டாக்டர்களின் கருத்து.

எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு மருத்துவர்களை அணுகாமல், நாட்டு வைத்தியம், கை வைத்தியம் எல்லாம் செய்து கொள்ள கூடாது என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை.

 


Advertisement
பருவமழை காலத்தில் வரும் வறட்டு இருமல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் தவிர்த்து, உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்
சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டிய அவசியம் இல்லை
ரூ. 8 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கழிவறை கட்டிக்கொடுத்த முன்னாள் மாணவர்கள்
"Smoke Biscuits உயிருக்கு ஆபத்து.. அதை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்" - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை
நடமாடும் உணவு சோதனை ஆய்வகங்களை அனுப்பி ஆன்-தி-ஸ்பாட் பரிசோதனை
சென்னை, சைதாப்பேட்டை அரசு புறநகர் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டுவிழா
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிகிச்சை... "காக்ளியர் இம்பிளான்ட்" சிகிச்சை மூலம் செவித்திறனை அளித்த மருத்துவர்கள்
தமிழகம் முழுவதும் 43051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
தியாகராஜ சாமி வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாணம்...

Advertisement
Posted Dec 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்..? வெள்ளம் அடிச்சிட்டு போயிடுச்சிண்ணே..! ரூ.16 கோடிக்கும் இனி பேட்ஜ் ஒர்க் தானா ? மாவட்ட நிர்வாகத்தின் வினோத விளக்கம்..

Posted Dec 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

யெய்யா.. கையை விட்ருய்யா.. அடித்துச் செல்லப்பட்ட வெள்ளத்தில் தந்தையின் கடைசி நிமிட தியாகம்..! அப்பா.. அப்பா.. உன்னை விட்டால்..

Posted Dec 03, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்

Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!


Advertisement