குரங்கம்மை என்ற பெயர், ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால், இனி M-pox என்ற பெயரில் அழைக்க, உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது.
1958ம் ஆண்டு டென்மார்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், குரங்கிடம் இருந்து வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால், இந்த நோய்க்கு குரங்கம்மை என பெயர் வந்தது. 1970 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன் முதலாக மனிதர்களுக்கும் இந்நோய் பரவத் தொடங்கியது.
இந்த நிலையில், குரங்கம்மை என்ற பெயர், ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து, புதிய பெயரை சூட்ட முடிவு செய்தது. அதன்படி தற்போது எம்-பாக்ஸ் (mpox) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு வரை குரங்கம்மை என்ற பெயரும் பயன்பாட்டில் இருக்கும் என்றும், அதன்பிறகு எம்-பாக்ஸ் என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.