கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 5 நாட்களில் உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் நிகழ்வதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நுரையீரலைத் தாக்குகிறது என்று அலட்சியம் வேண்டாம் என்றும நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உடலில் ரத்த நாளங்களை பாதிக்கும் நோயாக கோவிட் இருப்பதற்கான மருத்துவ சான்றுகள் அதிகரித்துள்ளன.
ரத்தம் கட்டிப்போவதால் உடலின் தசைகளை பாதுகாக்க அவற்றை உடனடியாக நீக்குவதும் அவசியமாகிறது.
இருதயத்திற்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்வதில் இந்த ரத்த நாளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.இதனால் மாரடைப்பு போன்ற விளைவுகள் ஏற்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்