கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியைப் பல மடங்கு அதிகரிக்கும் நடவடிக்கையாக மருந்து நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்போதுள்ள மருந்து உற்பத்தி அளவு மே-ஜூன் மாதங்களில் இரு மடங்காகவும், ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் 6 மடங்காகவும் அதிகரிக்கப்படும் என அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 10 கோடி தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள பாரத் பயோடெக் தொழிற்சாலையில் தடுப்பு மருந்து உற்பத்தியைத் தொடங்க 65 கோடி ரூபாயும், மும்பை ஹாப்கின் நிறுவனத்துக்கு 65 கோடி ரூபாயும் மத்திய அரசு மானியமாக வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.