மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலப்பதால் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கனடாவில் உள்ள டல்ஹௌசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 36 வகையான கடல் பாலூட்டிகளில் நடத்திய ஆய்வில், அவை சார்ஸ் கோவி 2 (SARS-CoV-2)வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொரோனா பாதிக்கப்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய நீர் கடலில் கலப்பதால் கடல் பாலூட்டிகளும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவைகளுக்கும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.