இரண்டு கட்ட பரிசோதனைகளில், கொரோனா தடுப்பு மருந்தான, 'கோவேக்சின்' பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில், துவக்கப்பட உள்ளது.
ஐதராபாதில் செயல்பட்டு வரும், பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிவதில், இறுதி நிலையை எட்டியுள்ளது.
தமிழகத்தில், காட்டாங்கொளத்தூரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரியில், அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அங்கு, முதற்கட்டமாக, 30 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், வெற்றி கிடைத்ததாக, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து, 150க்கும் மேற்பட்டோருக்கு மருந்து செலுத்தப்பட்டு, இரண்டாம் கட்ட பரிசோதனை நடந்தது. அடுத்ததாக, இம்மாத இறுதிக்குள், மூன்றாம் கட்ட பரிசோதனை துவக்கப்பட உள்ளது.