ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையைத் தொடங்கியுள்ளது.
இந்த மருந்தைச் செலுத்திச் சோதித்துக்கொள்ள அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் அறுபதாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தடுப்பு மருந்து செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை மிகுந்தது எனச் சோதனையில் மெய்ப்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதற்காக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு பத்தாயிரத்து எழுநூறு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.