கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்பதை அறிவுறுத்துமாறு களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு மகளிர்-குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், தாய்ப்பாலில் காணப்படுவதில்லை என்பதுடன், கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் அது குழந்தைகளுக்கு பரவாது என அது தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உலக சுகாதார நிறுவனம் அல்லது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை பார்த்து புரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் கைகளை சோப் அல்லது சானிடைசர் பயன்படுத்தி தூய்மைப்படுத்திக் கொள்ளுமாறு தாய்மார்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.