கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது ஜிங்கிவிர்ஹெச் என்ற ஆயுர்வேத மாத்திரையை அளித்து பரிசோதித்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக பங்கஜ கஸ்தூரி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜே.ஹரீந்திரன் நாயர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று பாதித்த 112 பேருக்கு மற்ற மருந்துகளுடன் ஜிங்கிவிர்ஹெச் மாத்திரை துணை மாத்திரையாக வழங்கப்பட்டு, அவர்களில் 42 பேரின் சிகிச்சை இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களில் ஜிங்கிவிர்ஹெச் மாத்திரை அளிக்கப்பட்ட 22 பேரின் RT-PCR சோதனையில் தொற்று நீங்கி 4 ஆவது நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 20 பேருக்கு மருந்துப்போலி எனப்படும் பிளாஸ்போ வழங்கப்பட்டது. இவர்கள் 5 முதல் 8 நாட்கள் வரை தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த இடைக்கால மருத்துவ பரிசோதனை முடிவுகளை தன்னாட்சி தகவல் தரவு கண்காணிப்பு குழு மதிப்பீடு செய்துள்ளது. கேரள அரசின் உரிமம் பெற்றுள்ள இந்த மாத்திரையை அங்கீகாரம் கிடைத்த உடன் கொரோனா தடுப்புக்கு நாடு முழுவதும் வழங்க தயாராக இருப்பதாக ஹரீந்திரன் நாயர் தெரிவித்துள்ளார்.