கொரோனா நோயால் உயிர் பிழைத்தோருக்கு மூளை மற்றும் நரம்பியல் மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் நடத்திய ஆய்வுகளில் கோவிட் நோய் தொடர்பாக ஏற்படும் பின்விளைவுகளாக மூளை நரம்பு மண்டல பாதிப்பும் மாரடைப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளை பாதிப்பு மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்பட்ட 43 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவர்களிடம் கொரோனாவால் இந்த பாதிப்பு உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக சுவாசக் குழாயையும் நுரையீரலையும் பாதிக்கும் நோயான கொரோனா மூளையையும் பாதிப்பதாக விஞ்ஞானிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் புதிய சவால்களை எழுப்பியுள்ளன.