சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்களை மறைக்கும் அளவிற்கு கடும் பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஊர்ந்தபடி சென்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது.