கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து வெளியேறும் நொய்யல் ஆற்று நீர் வெள்ளை நுரை பொங்கியபடி வெளியேறிவருகிறது.
நீர்வழித்தடங்களை முறையாக தூர் வாராததும், சாய ஆலை கழிவுகள் நீர்வழித்தடங்களில் கலக்கப்படுவதாலும் நொய்யல் ஆற்று நீர் மாசடைந்து துர்நாற்றத்துடன் வெளியேறுவதால், நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.