திருத்தணி அருகே சாலையோரம் இருந்த நாகமரம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தீ பரவாமல் இருக்க, ஜே.சி.பி. மூலம் தீப்பற்றி எரிந்த கிளைகளை விலக்கி பிடித்தபடி, தண்ணீரை பீய்ச்சி நெருப்பை அனைத்தனர்.
100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெயில் சுட்டெரித்ததால் நாக மரம் தீப்பற்றி எரிந்ததாக அப்பகுதி மக்கள் கருதிய நிலையில், உயர் அழுத்த மின் கம்பி உரசியதாலேயே தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.