தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட வட உள்மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் நாளை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் கிழக்கு திசை காற்று மற்றும் அதில் ஈரப்பதம் காரணமாக 2 நாட்களுக்கு பிறகு வெப்பம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.