கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பூ.மலையனூர் கிராமத்தில் நெற்பயிர்களை இரவில் காட்டுப்பன்றிகளும் பகலில் மயில்களும் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் சூழலில், காட்டுப்பன்றிகள் வயல்களுக்கு வராத வகையில் காப்புக்காடு பகுதியில் தடுப்பு வேலிகளை வனத்துறை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.