கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 30-ஆம் தேதி வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
டிசம்பர் 1-ஆம் தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட புயல் சற்று தாமதமாக உருவாகக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.