பசுமையான மரங்கள் நிறைந்த அந்த வனப்பகுதியில் நீண்டு இருக்கும் மரங்களுக்கு இடடையே மனிதன் தனது மூச்சை இழுத்து விடுவதை போன்று பூமியும் சத்ததுடன் மேல்நோக்கி உயர்ந்து பிறகு பழைய நிலைக்கு வரும் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து பலரும் வியப்பில் ஆழ்ந்திருக்க காடு மூச்சு விடுகிறதா..? என்ற கேள்விக்கான விடையை அறிவியல் வல்லுநர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதாவது, பலமாக காற்று அடிக்கும்போது இலகுவான வேர்களை கொண்ட நீண்ட மரங்கள் காற்றில் அசைவதாகவும், பலத்த காற்றில் வேர்கள் அசைவுக்கொடுக்க அவற்றை பிடித்துக் கொண்டிருக்கும் மண்பகுதியும் மூச்சு விடுவதை போன்று மேலே எழும்பி பின்பு அடங்குவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக டிவிட்டரில் பகிரப்பட்டு காடு மூச்சு விடுவதாக வைரலானது. தற்பொழுது அதே வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.