பால்காரர் ஒருவர் தனி நபர் இடைவெளியை பின்பற்ற கடைபிடித்து வரும் உத்தி குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தன்னை நெருங்கி நின்று பால் வாங்கும் எவருக்கும் பாதிப்புக்கான வாய்ப்புகளைக் கருதி புனல் மற்றும் நீண்ட குழாய் போன்ற அமைப்பை தனது வாகனத்தில் பொருத்தியிருக்கும் அவர் புனலில் பாலை ஊற்றும் போது குழாயின் மறுபுறம் நீண்ட தனி நபர் இடைவெளியில் நிற்கும் வாடிக்கையாளர் பாத்திரத்தில் பாலைப் பெற்றுக்கொள்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படம் வெளிடப்பட்டுள்ள நிலையில் எந்த ஊர் என்பது வெளியிடப்படவில்லை.