நாம் தினம் தினம் பார்க்கும் பட்டாம் பூச்சிகள் கண்களுக்கு விருந்தளிப்பவை ஆகும். எந்த ஒரு கவிஞரும் இதன் அழகை வருணிக்காமல் இருந்ததில்லை.அவ்வளவு சிறப்பு வாய்ந்தவையாக இருப்பதால் தான் இன்றைக்கு வனமானது உயிர்ப்போடு இருக்கிறது. காடுகள் எல்லாம் வீடுகளாக மாறிய நிலையில் பட்டாம் பூச்சிகளை இப்போது காண்பது எல்லாம் அரிதாகிவிட்டது.சட்டென்று பறந்து நமது கண்களில் விளையாடக்கூடியவை.முட்டையில் இருந்து புழுவாக மாறி கூட்டுப்புழுவாக உருவாகிறது.சில தினங்களுக்கு பிறகு வெளியே வரும் பட்டாபூச்சிகள் சிறகை விரித்து பறக்கிறது.வண்ண வண்ண கலர்களில் வானமெல்லாம் பறக்கும் இவ்வுயுரினம் 3000 கிலோமீட்டர் வரை வலசை செல்கிறது.இவ்வுயுரினம் விஷம் நிறைந்த செடிகளின் மீதே முட்டைகளை இடுகிறது.விஷ செடியாக இருந்தாலும் பூச்சிகள் விஷத்தன்மையுடன் இருப்பதில்லை
நாம் பார்க்க கூடிய அனைத்தும் பட்டாம் பூச்சிகளும் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளும் அல்ல ;இவை இரண்டும் செதிலிறகுகள் வகை பூச்சியினங்கள் ஆகும் .இறகுகளில் சில இறக்கைகளை மடக்கி உடலின் மேற்புறத்தில் வைத்துக்கொண்டு பறக்கிறது. வண்ணத்துப்பூச்சிகள் தன் கால்களால் ருசியை அறிகிறது.அதே நேரம் பெரும்பாலான பட்டாம் பூச்சிகள் இரவு நேரத்திலும் சுற்றி திரிபவைகள் அவற்றை இரவாடிகள் என்றும் அழைப்பார்கள்.இவைகள் அமரும் போது தனது இறக்கைகளை கிடைமட்டமாகவும் விரித்து பறக்கும் போது கொக்கி போன்ற அமைப்பு பின் இறக்கைகளை பிடித்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.உலகம் முழுவதும் 17,500 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில், 750 ஐ அமெரிக்காவில் காணலாம். மோனார்க் பட்டாம்பூச்சிகள் குளிரில் இருந்து தப்பிக்க இடம்பெயர்கின்றன,
ஒவ்வொரு குளிர்காலத்திலும் சராசரியாக 2,500 மைல்களுக்கு மேல் பயணிக்கிறது. இருப்பினும், இந்த பரந்த தூரத்தை மறக்கும் ஒரே பட்டாம்பூச்சி மோனார்க் என்றாலும், பல பட்டாம்பூச்சி இனங்கள் குளிர்காலத்தில் வானிலை நிலையை விட்டு வெளியேறுகின்றன, அவற்றின் கண்களில் 6000 லென்ஸ்கள் வரை இருப்பதால் பபுற ஊதா நிறமாலைக்கு அப்பால் பார்க்க முடியும் .அவற்றிற்கு காதுகள் கிடையாது என்ற நிலை இருந்த போதில் 2012ல் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவை முற்றிலும் செவிடு இல்லை என்று நிருபித்தனர்.
மனிதர்கள் செய்ய வேண்டியவை:
வளர்ந்து வரும் சுற்றுச்சூழலில் ஒரு முக்கியமான இணைப்பாக செயல்படுகின்றன. இவைகளின் முக்கிய பணி அயல் மகரந்த சேர்க்கை.ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு சேரும் போது மகரந்ததிற்கு தேவையான துகள்களை அதனுடனே எடுத்து சென்று உதவுகிறது,இதன் மூலம் பல்லுயுரி பெருக்கத்திற்கு உதவுகிறது. பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கை வழியில் விவசாயம் செய்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும் இப்படி சிறப்பு வாய்ந்த இனங்களை இன்று அழிவின் விளிம்பில் விட்டுவிட்டோம்.காடழிப்பு,உலக வெப்பமயமாதல்,வெப்பநிலை மாற்றம்,பெருகி வரும் காலநிலை மாற்றங்கள் பெரிய உயிரினங்களை மட்டும் இல்லாமல் சிறிய உயிரினங்களையும் பலிகொள்கிறது.