உலக வனவிலங்குகள் தினம், அல்லது காட்டுயுர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அழிந்து வரும் உயிரினங்களை காப்பற்றுவதற்காகவும் அதன் முக்கியத்துவத்தை வருங்கால இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினத்தில் பள்ளி ,கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது .
இந்த வருடத்தின் கருபொருளாக “பூமியிலுள்ள எல்லா உயிர்களையும் நிலைநிறுத்தி பாதுகாக்க வேண்டும் “ என்பதே ஆகும்.
இன்றைய சூழலில், தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்கள் வேட்டையாடப்படுகின்றன.இவைகளை பாதுகாக்க அரசும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.காலநிலை மாற்றம்,கடல் மட்டம் ,வெப்பநிலை ,காடழிப்பு போன்றவற்றால் அரிய உயிரினங்களை இழந்து வருகிறோம்.
ஒரு நாட்டின் வளத்தை அங்குள்ள உயிரினங்களையும்,காடுகளை வைத்து தான் மதிப்பீடு செய்கிறார்கள். இவ்வுயிரினங்களை மீட்டு பல்லுயுரிசமநிலை செய்ய வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்