சீன தலைநகர் பீஜிங் நகரில் நடைபெற்ற நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட நவீன கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
மேம்பட்ட சுய-ஓட்டுநர் மென்பொருளைக் கொண்டிருக்கும் கார் ஒன்றில் ஸ்டீயரிங், டேஷ்போர்டு இல்லாததால், பயணிகள் வசதியாக உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரை மொபைல் சந்திப்பு அறையாக பயன்படுத்தி அதில் உட்கார்ந்தபடி அலுவலக பணிகள் மற்றும் ஆலோசனை செய்ய முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இது பயண நேரத்தை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.