ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவை இந்தியா பல்வேறு துறைகளில் நுட்பமாக பயன்படுத்தி வருவதாக மைக்ரோ சாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் பில் கேட்ஸை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 மாநாட்டின் போது தலைவர்களின் உரைகளை மொழி பெயர்க்க ஏ.ஐ. பயன்படுத்தப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
காசி தமிழ் சங்கமத்தின் போது தாம் ஹிந்தியின் பேசியதை, ரியல் டைமில் தமிழர்கள் தமிழில் கேட்கும் வகையில் ஏ.ஐ. பயன்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
இந்த முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டினார். அவருக்கு நீலகிரி தேயிலை, தூத்துக்குடி முத்து, காஷ்மீரத்து கம்பளி, குங்குமப் பூ உள்ளிட்ட பொருட்களை பிரதமர் பரிசாக வழங்கினார்.