செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐஓடி தொழில்நுட்பம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச கருத்தரங்கை துவக்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மனிதர்களும் ஏ.ஐ தொழில்நுட்பமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கூறினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அனைத்து துறைகளிலும் அதிகளவு இருக்கும் என்பதால் அதனை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துபவராக நாம் இருக்க வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.