ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சைபர் ஸ்போர்ட்ஸ் ரோபோ சண்டையில் புதுச்சேரி இளைஞர்கள் வடிவமைத்த ரோபோ முதலிடம் பிடித்தது.
Phygital Game of Future என்ற பெயரில் கஸன் நகரில் நடைபெற்ற இந்த தொடரை அதிபர் விளாடிமிர் புடின் தொடங்கி வைத்தார்.
16 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரில், இந்தியா சார்பில் புதுச்சேரியில் இயங்கிவரும் DS Robotics நிறுவனத்தின் அணி தேர்வு செய்யப்பட்டிருந்தது.
சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ரோபோக்களை வீழ்த்திய DS Robotics அணியின் ரோபோ, இறுதிப்போட்டியில் ரஷ்ய ரோபோவை துவம்சம் செய்து வாகை சூடியது.