பட்டனை தட்டிவிட்டால் சில நொடிகளில் குற்றவாளிகளை கட்டிப்போடும் Remote restraint device என்ற கருவிகளை கொள்முதல் செய்ய சென்னை காவல்துறை ஒப்பந்தம் கோரியுள்ளது.
முதற்கட்டமாக 25 கருவிகளை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
Remote restraint device என்ற கருவியின் பட்டனை அழுத்தினால், அதிலிருந்து 3 விநாடிகளில் வெளியேறும் கயிறு குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர்களின் காலை சுற்றி அவர்களை முடக்கிப்போடும்.
தப்பியோடும் நபரை இக்கருவையை பயன்படுத்தி 25 அடி தூரத்தில் இருந்தபடி கீழே விழவைக்க முடியும்.
கைது நடவடிக்கையின் போது குற்றவாளிகள், காவல் துறையினருக்கு இடையே தேவையற்ற மோதலை தவிர்க்க இக்கருவி உதவும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.