சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில், விக்ரம் லேண்டர் கருவி கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது.
பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து சாய்தளம் வழியாக பிரக்யான் ரோவர் வெளியே வந்து தரையிறங்கிய காட்சியை விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவு செய்துள்ளது.
ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.