சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், முந்தைய தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களால் விக்ரம் லேண்டர் நிச்சயம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் நம்பி நாராயணன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த அவர், லேண்டரை மென்மையாக தரையிறக்குவதற்கான வசதிகள் துல்லியமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிலவில் மனிதர்கள் வாழுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள நம்பி நாராயணன், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவர் மூலம் நிலவில் உள்ள தனிமங்கள், எரிபொருள் வளங்கள் உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.