சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோக்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
புதிய தொழில்நுட்பத்துடன், மனிதர்களை போலவே பாவனைகளையும் அசைவுகளையும் ரோபோக்கள் வெளிப்படுத்தின.
மூட்டு பகுதியை மிக இயல்பாக அசைக்கும் வகையிலும், நுண்ணிய அசைவுகளை வெளிப்படுத்தும் வகையிலும் மனித உருவ ரோபோக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவற்றின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் ரோபோட்ஸ் கூறியது.
ரோபோக்களின் யதார்த்தமான தோற்றம், கண் அசைவு, விரல் அசைவு உள்ளிட்டவை வியக்கவைக்கும் வகையில் இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.