எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று வளிமண்டலத்தில் உள்ள அயனோ-ஸ்பியரில் தற்காலிக துளையை ஏற்படுத்தியதாக பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முறையோடு வெடித்து சிதறிவிடாமல், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஃபால்கன்-9 ராக்கெட், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலிருந்து கடந்த புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் ஏவப்பட்ட காணொலியை தான் ஆய்வு செய்தபோது, நிலத்திலிருந்து 286 கிலோமீட்டர் தொலைவில் வளிமண்டலத்தில் இளஞ்சிவப்பு நிற ஒளி தோன்றியதாகவும், அது அயனோஸ்பியரில் தற்காலிகமாக துளை ஏற்பட்டதை குறிப்பதாகவும் இயற்பியல் பேராசிரியர் பெளம்கார்டனர் (Baumgardner) தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் சக்தி வாய்ந்த ராக்கெட்கள் ஏவப்பட்டு பல துளைகள் ஏற்பட்டால் ரேடியோ அலைகள் சிதறி ஜிபிஎஸ் சாதனங்கள் துல்லியமாக செயல்படாமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்