டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியிலும் 'யூசர் நேம்' (User name) முறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வாட்ஸ் ஆப்பில் பயனர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கட்டாயம் தேவைப்படும் நிலையில், அதற்கு மாற்றாக 'யூசர் நேம்' மூலம் தொடர்பு கொள்ளும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக ஆண்டிராய்டு இயங்குதளங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.