டாடா நிறுவனம் தங்களது புதிய ரக சி.என்.ஜி. கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டியாகோ என்.ஆர்.ஜி. ஐ.சி.என்.ஜி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார்களின் தொடக்க விலை 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் உள்ள டியாகோ ரக பெட்ரோல் கார்களில் சில மாறுதல்கள் செய்து அறிமுகப்படுத்தப்பட்ட அந்த கார், புதிய தொழில்நுட்பங்களையும், பயணிப்பதற்கு கூடுதல் வசதிகளையும் கொண்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.