இந்தியாவில், 5 ஜி சேவையை செல்போனில் செயல்படுத்தக்கூடிய வகையில் மென்பொருள் அப்டேட்களை, வரும் நவம்பர் - டிசம்பரில் வெளியிடவுள்ளதாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரும் டிசம்பரில் ஐபோன் 14, 13, 12 மற்றும் ஐபோன் SE உள்ளிட்ட மாடல்களில், 5 ஜி சேவையை பெறும் வகையில் மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்தது.
அதேபோல், சாம்சங் நிறுவனம் நவம்பர் மாத மத்தியில், உயர்ரக மாடல் போன்களுக்கான மென்பொருள் அப்டேட்டை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டது.