MG Motor இந்தியா நிறுவனம் இந்தியாவின் முதலாவது பெர்சனல் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் அஸிஸ்டென்ட் மற்றும் செக்மென்டில் முதலாவதாக ஆட்டானமஸ் டெக்னாலஜியுடன் கூடிய மிட்-சைஸ் எஸ்யுவி வாகனமான MG ஆஸ்டரை அறிமுகம் செய்துள்ளது.
துவக்க சிறப்பு விலையாக 9 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு பிரிமியம் மிட் சைஸ் எஸ்யுவியான இதை வாங்கலாம். Style, Super, Smart மற்றும் டாப் என்ட் மாடலாக Sharp என நான்கு வேரியன்ட்கள் உள்ளன.
அன்லிமிட்டட் கிலோமீட்டருடன் கூடிய 3 ஆண்டு வாரண்டி, 3 ஆண்டு ரோடு சைடு உதவி, 3 இலவச பீரியாடிகல் சர்வீஸ் என 3-3-3- பேக்கேஜுடன் MG ஆஸ்டர் கிடைக்கும்.
எனவே வாடிக்கையாளருக்கு, ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை கிலோ மீட்டருக்கு 47 காசுகள் மட்டுமே பராமரிப்பு செலவாகும் . Smart மற்றும் Sharp வேரியன்ட்களில் 80 க்கும் அதிகமான கார் பியூச்சர்கள் அடங்கிய ஐ-ஸ்மார்ட் டெக்னாலஜி உள்ளது.
இந்த செக்மென்டில் இதுவரை யாரும் வழங்காத பல அம்சங்கள் MG ஆஸ்டரில் உள்ளன.MG ஆஸ்டர் புக்கிங் வரும் 21 ஆம் தேதி துவங்குகிறது. நவம்பர் மாதம் டெலிவரி துவங்கும்.
டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புவோர் MG டீலர்கள் அல்லது www.mgmotor.co.in என்ற தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.