எல்ஜி நிறுவனம் 27 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான டிவியை தயாரித்துள்ளது. திரைப்படத்தை வீட்டிற்கே கொண்டு வருகிறோம் என்ற அறிவிப்போடு வெளியிடப்பட்டுள்ள டிவி குறைந்தபட்சம் 9 அடி அகலத்தில் தயாரிக்கப்படுகிறது.
படத்தின் தெளிவும், தரமும் 2 கே, 4 கே மற்றும் 8 கே வரை கொண்ட இந்த டிவி எக்ஸ்ட்ரீம் ஹோம் என்ற பெயருடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவியின் தரத்திற்கேற்ப இதன் விலையும் உச்சகட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவன அறிவிப்பின் படி குறைந்தபட்சம் 50 ஆயிரம் பவுண்டுகள் முதல் அதிகபட்சம் 12 லட்சம் பவுண்டுகள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.