இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் 10 புதிய வகை மின்சார கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனை, அந்நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார். 14 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் நெக்சான் இ.வி என்ற மின்சார காரை டாடா நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் மிக குறைந்த விலை மின்சார கார் என கூறப்படும் நெக்சான் இ.வி. காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், 2025 ஆம் ஆண்டுக்கள் மேலும் 10 புதிய வகை மின்சார கார்களை களமிறக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எதிர்காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி விட்டு, முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.