பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தியை குறைத்து அதன் மூலம் சேமிக்கும் முதலீட்டில், அதிக அளவில் மின்வாகனங்களை தயாரிக்க, பன்னாட்டு கார் நிறுவனமான ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி பெட்ரோல்-டீசல் கார்களின் உற்பத்தியை 50 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைக்க ஹூண்டாய் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் முழுவதும் மின்கார்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ள ஹூண்டாய், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளில் அதற்காக தனி கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச மின்கார் சந்தையில் 10 சதவிகிதம் என்ற அளவுக்கு வர்த்தகத்தை பிடிக்கும் வகையில் வரும் 2025 க்குள் 10 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.