அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அப்போபிஸ் என்ற குறுங்கோள்தான் பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சில வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக 2029 மற்றும் 2036ம் ஆண்டுகளில் இரு விண்வெளிப் பாறைகள் பூமியைத் தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை தடம் மாறிச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள் 340 மீட்டர் நீளமுள்ள அப்போபிஸ் குறுங்கோள் 2068ம் ஆண்டு பூமிக்கு அருகில் வரும் அச்சம் இருந்தது.
தற்போது அதன் பாதையும் மாறும் நிலையில் உள்ளதால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்துள்ளனர்.