செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

இந்தியாவில் களம் இறங்குகிறது பிரபல டெஸ்லா நிறுவனம்

Jan 13, 2021 05:10:15 PM

உலகின் பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, அதன் கிளை நிறுவனத்தை இந்தியாவின் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் ஊக்கமளித்து வருகின்றன. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமொபைல் உலகைப் புரட்டிப்போட்ட எலக்ட்ரிக் கார் நிறுவனமானது டெஸ்லா. இந்த நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் பெங்களூரில் கால் பதிக்க உள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மாஸ்க், Tesla இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்( Tesla India Motors and Energy Private Limited ), என்ற பெயரில் பெங்களூரில் தனது நிறுவனத்தை உருவாக்க இருக்கிறார்.

இது தொடர்பான அறிக்கையில், இந்தநிறுவனமானது, மின்சார வாகனங்கள் தயாரிக்கும் விற்பனையை ஊக்குவிக்கும். மேலும் பாகங்கள், உபகரணங்கள், உள்ளிட்ட தயாரிப்புகள் இதில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவுகளில், 3 பேரை தலைவராக அறிவித்துள்ளது . அதில் வைபவ் தனீஜா, வெங்கட்ராமன் ஸ்ரீராம், டேவிட் ஜான் ஃபெயின்ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்லா இந்தியாவில் முதற்கட்டமாக கார் விற்பனைக்காக மட்டுமே அலுவலகத்தை துவங்கியுள்ளது. பின்னாளில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வெற்றியை அடிப்படையாக கொண்டு ஆராய்ச்சி தளம், விண்வெளி மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெஸ்லாவின் இந்தியா வருகையையொட்டி, மஹிந்திரா, மாருதி சுசூகி, ஹீண்டாய் ஆகிய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் டெஸ்லாவின் இந்தியா வருகையை பலர் வரவேற்றாலும், சிலர் கலாய்த்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக பெங்களூரு நகரம் எப்போதும் வாகனங்கள் நெரிசல் மிகுந்து காணப்படும். அப்படி நெரிசல் மிகுந்த சாலைகளில் பெட்ரோல் டீசல் வாகனங்களே திக்கு முக்காடி போகும் நிலையில், டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களின் நிலைமை என்னவாகுமோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Advertisement
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
"சுவாச மண்டலத்தை பாதிக்கும் புதிய பாக்டீரியா".. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள வீரர்களுக்குப் புதிய சிக்கல்..
40-வது பிறந்த நாளை கொண்டாடிய பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க்.. 'சர்ப்ரைஸ் விசிட்' அடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பில் கேட்ஸ்..!
வருகிறது, மனதில் நினைப்பதை வெளிப்படுத்தும் கருவி!.. மூளையில் பொருத்தி சிக்னல் மூலம் வார்த்தைகளைப் பெறலாம்
பயன்படுத்தப்பட்ட கார்களை விற்றுவரும் 'ஸ்பின்னி' நிறுவனம்
சீனாவுக்கு டெஸ்லா மின்சார வாகன நிறுவன சிஇஓ எலான் மஸ்க் திடீர் பயணம்
சீனாவில் கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்
குறைந்த எடையில் ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement