ஹுண்டாய் நிறுவனம் டக்சன் வகையைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரம் கார்களில் தீப்பற்றும் வாய்ப்புள்ளதால் அவற்றை வெளியே நிறுத்தும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
2016 முதல் 2018 வரையும், 2020 முதல் 2021 வரையும் விற்ற ஹுண்டாய் டக்சன் கார்களில் மின்கசிவால் தீப்பற்றும் அபாயமுள்ளதால் அவற்றை பிப்ரவரி இறுதி முதல் முகமைகளில் பழுதுபார்த்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதுவரை வாகனங்களைத் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கும்படியும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மார்ட் குருயிஸ் கன்ட்ரோல் வசதி உள்ள வாகனங்களில் இந்தக் கோளாறு இல்லை என்பதால் அவற்றைச் சரி செய்ய வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.