சாதாரண விங் சூட்டை விட 3 மடங்கு அதிகமாக, மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடிய பேட்மேன் வகை விங்சூட்டை பி.எம்.டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கை டைவர் பீட்டர் சால்ஸ்மேனுடன் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக மின்சார விங் சூட்டை தயாரிக்கும் பணியில், பி.எம்.டபிள்யூ ஈடுபட்டிருந்தது.
அந்த வகையில் இறுதி வடிவம் பெற்றுள்ள விங் சூட்டை அணிந்து சக வீரர்களுடன் ஆஸ்திரியா மலைகளுக்கு இடையே பறந்து பீட்டர் சால்ஸ்மேன் வியக்க வைக்கும் சாகசங்களை நிகழ்த்தினார்.