வாகனபிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி சியாராவின் சோதனை ஓட்டம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.
மாருதியின் முந்தைய மாடலான ஜிப்சியின் மேம்பட்ட வடிவமாக கருதப்படும் ஜிம்னி சியாரா, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.
10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது,
5ஸ்பீடு மேனுவல் மற்றும் 4ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் தயாராகும் ஜிம்னி, மஹிந்திராவின் தார், போர்ஸ் நிறுவனத்தின் கூர்க்கா ஆகிய எஸ்யுவிகளுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.