செல்போன் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் நான்கு வாரங்கள் வரை அதில் மறையாதிருக்கும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் செல்போனை பயன்படுத்துபவருக்கு அது பரவும் வாய்ப்பும் அதிகமாகும்.வங்கிகள், ஏடிஎம்களில் பெறப்படும் ரொக்கப்பணம், கண்ணாடி போன்ற பொருட்களில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்குக் கூட நீடித்திருக்கும் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மென்பொருட்கள் மீது படரும் வைரஸ் நீண்ட காலம் நீடித்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.